முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் அதிகாரி பலி

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கெய்வ், ஜூன்.8 - உக்ரைனில் கிழக்கு பிராந்தியத்தில் பிரிவினைவாத குழுக்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும், ஒரு ராணுவ சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லாவ்யான்ஸ், செவர்ன்ஜி, லுகான்ஸ்க் உட்பட பல்வேறு நகரங்களை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று பிரிவினைவாத குழுக்கள் உக்ரைனில் இரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அந்நகரங்களில் இருக்கும் போலீஸ், ராணுவ அலுவலங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். ஸ்லாவ்யான்ஸ்  நகரில் சர்ச்சுக்கு அருகே பிரிவினைவாத குழுவினர் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மோலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர். என்று உக்ரைன் துணை உள்துறை அமைச்சர் செர்கியாரோவி கூறினார்.

ஸ்லாவ்யான்ஸ் நகருக்கு அருகே உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றி சென்ற ராணுவ சரக்கு விமானத்தை நேற்று தீவிரவாதிகள் சுட்டு வீழ்திதனர். இந்த தாக்குதலில் விமானி கதி என்னவென்று தெரியவில்லை. இது பற்றி விசாரித்து வருகிறோம் என்று உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லுகான்ஸ்க் நகரத்துக்குள் நுழைந்த பிரிவினைவாத படைகள், உக்ரைன் அரசு படைகளை விரட்டினர். கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களில் உள்ள சில ராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதாக உக்ரைன் அரசு வட்டாரங்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

கிழக்கு உக்ரைன் நகரங்களில் பிரிவினைவாத குழுக்களின் தொடர்த்தாக்குதலில், அந்நகரங்களின் கட்டுப்பாட்டை உக்ரைன் அரசு படிப்படியாக இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago