எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத், அக் 12 - பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கானும் அவாமி கட்சி தலைவர் தாஹிர் உல் காத்ரியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று இம்ரான்கானும், தாஹிர் உல்காத்ரியும் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் முன் இரு கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தை கட்டுப்படுத்த முடியாத நவாஸ் ஷெரீப் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு முல்தான் நகரில் இம்ரான்கான் பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இரு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் இம்ரான்கானை நேரில் காண முந்தும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியானார்கள். மேலும் 42 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நிஸ்தார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |