எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பால் ஒரு இன்றியமையாத சமச்சீர் உணவாக இருப்பதோடு பச்சிளங்குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும, பெரியவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு ஆகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் பாலில் இருக்கும். எனவே பாலை சரிவிகித உணவு என்று கூறலாம். இறைச்சி சாப்பிடாதவர்கள் பாலை முக்கியமாக உட்கொள்ள வேண்டும். எனவே எல்லா வகையிலும் பயனுள்ள பாலை நல்லமுறையில் அதிலுள்ள சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும்.
எனவே கறவை மாட்டின் பாலை அசுத்தம் சேராதவாறு சேகரித்து தரமான பாலை உற்பத்தி செய்வது இன்றியமையாததாகும். தூய்மை இல்லாமல் உற்பத்தி செய்யும் பாலினால் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவலாம் மேலும் பாலில் கிருமிகள் அதிகரித்து பாலின் தரத்தைக் குறைத்து விடும.; எனவே தரமான பாலை உற்பத்தி செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.
பால் கறத்தல் : பசுவின் மடியில் பால் சுரப்பது, பல உடல்கூறு இயக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. கன்று மடியில் ஊட்டுவதாலும், பசு தீவனத்தை பார்ப்பதாலும் அல்லது பால் கறப்பவர் மடியைத் தடவுவதாலும் நரம்புகள் மூலமக சில ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் பால் சுரப்பது இயக்கப்படுகிறது.
பால் கறப்பது ஒரு கலை நல்ல திறமை முதிர்ந்த அனுபவம் இவை அனைத்தும் பால் கறப்பதற்கு மிக முக்கியமாகும். பால் கறக்கும் பொழுது மிகக் கவனமாகவும் அமைதியாகவும,; அதே நேரம் விரைவாகவும் மடியில் உள்ள அனைத்து பாலை பெறும்படியும் செய்ய வேண்டும். மாடுகளுக்கு எந்த சிரமமில்லாமல் பாலை கறக்க வேண்டும்.
அடித்தல், பயமுறுத்துதல், பேரிரைச்சல் போன்றவற்றால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைப்பட்டு பால் சுரப்பது நின்றுவிடும். பால் கறப்பவர் மாறினாலும் பாலின் அளவு குறையும.; பால் கறக்க ஆரம்பித்தவுடன் மடியில் உள்ள அனைத்து பாலையும் கறக்கும்படி வேண்டும். அப்படி இல்லையென்றால் பால் மடியிலேயே தங்கிவிடும்.
பால் கறக்கும் முறைகள் மற்றும் பாலில் சேரும் அசுத்தங்களை கட்டுப்படுத்தும் முறைகள்:
1. முழு விரல்களை உபயோகித்தல் : முழு விரல்களை உபயோகிக்கும் முறையில் அனைத்து விரல்களாலும் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறையில் கன்று ஊட்டுவது போல அனைத்து பக்கங்களிலிருந்தும் ஒரே அளவான அழுத்தம் ஏற்படும். காம்புகள் பெரிதாக உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம்முறையைக் கையாள்வது சிறந்தது.
2. இருவிரல்களை உபயோகித்தல் : ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் காம்புகளை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து கீழ் நோக்கி இழுப்பதன் மூலம் கறக்க முடியும். இதன் மூலம் காம்புகளுக்கு ஒரே அளவான அழுத்தம் கிடைக்காது. மேலும் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. இம்முறையைக் காட்டிலும் மேற்கூறிய முறைதான் சிறந்தது. எனினும் சிறு காம்புகள் உள்ள மாடுகளிலும் பால் கறந்து முடியும் தருவாயில் கடைசியில் இம்முறையைக் கடைபிடிக்கலாம்.
3.அசுத்தங்களை கட்டுப்படுத்துதல் : பால் கறக்கும்போது முதல் பாலினை நீக்கிவிட வேண்டும். ஏனெனில் கறவை மாட்டின் மாட்டின் மடியினில் சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் ஆரோக்கியமான நோயற்ற மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்வித கெடுதலும் செய்வதில்லை. இதனால் காம்பிலுள்ள கிருமிகளை போக்கிவி;ட முடியும். கறவை மாடுகள் காசநோய், கருச்சிதைவு, கோமாரி, அடைப்பான், மடிவீக்கம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதனால் மாடுகளை பரிசோதனை செய்வது அவசியம்.
மாடுகளின் உரோமம,; சாணம், மண், வைக்கோல் மற்றும் மாடுகளின் உடலில் உள்ள அசுத்தங்கள் பாலில் சேர வாய்ப்புண்டு. சில கிருமிகளும் பாலில் சேரும் எனவே மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். குறிப்பாக மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட ரோமம் காணப்பட்டால் அவைகளை கத்தரித்து நீக்க வேண்டும். மிக முக்கியமாக பால் கறப்பதற்கு முன் மடியில் அல்லது பக்கத்தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான உலர்ந்த துணியினால் துடைக்க வேண்டும்.
4.மாட்டுக் கொட்டகை மற்றும் சுற்றுப்புறச்சூழல் : பால் கறக்கும் இடம் நன்கு முறையாக கழுவி சுத்தமாக இருத்தல் வேண்டும். பால் கறப்பதற்கு முன் மாடுகளை தேய்த்தல், கொட்டகையைக் கூட்டுதல,; மாடுகளுக்கு காய்ந்த தீவன வகைகளைக் கொடுத்தல் போன்றவைகளால் சுற்றுப்புறச் சூழல் அசுத்தமடைந்து பாலில் நுண்ணுயிரிகள் சேர வாய்ப்புண்டு. மேலும் குழிப்புல் சாணம் முதலியவற்றிலிருக்கும் வாசனையை பால் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டது. பால் கறக்கும் போது இவ்வசுத்தங்களைத் தவிர்த்தல் வேண்டும். குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களால் ஓரளவு குறைக்க முடியும். கொட்டகையில் ஈக்கள், கொசுக்கள் பரவாமல் தடுக்க சாணம் சிறுநீர் போன்றவவைகளை அருகில் இருக்காதவாறு அப்புறப்படுத்தி அவ்வப்போது கழுவி கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
5.பாத்திரங்கள் : பாலில் அதிகிப்படியான நுண்ணுயிரிகள் பால் பாத்திரத்தின் மூலம் தான் சேருகின்றன. சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில், கிருமிகள் பாத்திரத்தில் உள்ள சிறு பள்ளங்கள் மற்றும் விளிம்புகள் ஆகியவற்றில் இருக்க வாய்ப்புண்டு. எனவே பாலைக் கறப்பதற்கும் சேகரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும் பாத்திரம,; மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
பால் பாத்திரங்களை சுத்தம் செய்ய சோடா உப்பு (றுயளாiபெ ளுழனய) காஸ்டிக் சோடா, டிரை சோடியம் பாஸ்பேட் போன்ற இரசாயண பொருட்களை உபயோகிக்கலாம். பாலில் உள்ள கொழுப்பு, புரதம், சர்க்கரைப் பொருள் ஆகியவைகளைக் கரைத்து நீக்கும் தன்மை கொண்டது. எனவே சூடான தண்ணீரில் வாசிங் சோடாவைக் கரைத்து, அத்தண்ணீரால் பாத்திரத்தை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு பாத்திரத்தை உபயோகிப்பது சிறந்தது.
6.பால் கறப்பவர் : பால் கறப்பவா காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் கறக்கும் போது தும்முவதாலும் பேசுவாதலும் இக்கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு. பால் கறப்பவரின் கைகளிலுள்ள நகங்கள் நீண்டிருந்தால் அதில் சேர்ந்துள்ள அழுக்குகள் மூலம் பால் அசுத்தம் அடையலாம். எனவே நகங்களை நறுக்கி, கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து உலர்ந்த சுத்தமான துணியில் துடைத்து அதன்பின் தான் பால் கறத்தலை தொடங்க வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு உற்பத்தி செய்யப்பட்ட சுத்தமான பாலிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் (ளுழடனைள ழேவ குயவ – ளுNகு) அளவைக்கொண்டே பண்ணையாளர்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை மூலம் பாலின் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவை அதிகரிக்கலாம்.
பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் :
கோடை காலமான சித்திரை, வைகாசி போன்ற காலங்களில் வெப்பநிலை கூடுதலாக இருக்கும், அப்போது பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருக்கும்.
வெயிலில் கலப்பின கறவை மாடுகளை 4 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாலோ, மேய விட்டாலோ பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.
கன்று ஈன்றபின் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்படி கொடுக்காமலிருந்தால் பாலில் 0.4 முதல் 0.5 சதவீதம் வரை கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.
கொட்டகையின் வெப்பநிலையும் 30 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் பொழுது கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறைகிறது.
பால் கறக்கும் இடைவெளி 15 மணி நேரத்திற்குமேல் இருக்கக் கூடாது. பாலினை 12 மணி இடைவெளிக்கு ஒரு முறை கறப்பது பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். பாலை கறக்காமல் வாரத்திற்கொருமுறை மடியில் விட்டுவிடுவதும் பால் உற்பாத்தியும், கொழுப்புச்சத்தின் அளவும் குறைவதற்கான காரணங்களாகும்.
பால் கறக்கும் போது முதலில் கறக்கப்படும் காலில் கொழுப்புச்சத்து சற்றே குறைவாகவும், நடுவில் கறக்கப்படும் பாலில் சத்து அதிகமாகவும், இறுதியில் கறக்கப்படும் பாலில் கொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் கறக்கப்படும் பாலில் பொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் விடாமல், கநற்தபாலினை கன்றுகளுக்கு பாத்திரத்தில் ஊற்றி குடிக்கச் செய்யவேண்டும். முடியில் குடிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு குறையாமல் பாதுகாக்க சில வழிமுறைகள் :
ஜெர்சி இன மாடுகள் அதிக கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருளும் கொண்ட பாலினை தரக்கூடியவை.
பாலினை 12 மணி நேர இடைவெளியில் சரியாக கறக்க வேண்டும். மாடுகளின் பால் உற்பத்தி திறன் நாளுக்கு 15 லிட்டருக்கு மேல் இருக்குமானால் 8 மணி நேர இடைவெளியில் அதாவது தினமும் மூன்று முறை பால் கறப்பதன் மூலம் அதன் உற்பத்தி அதிகரிக்கும்.
கறவை மாடுகளின் மடியில் ஒருவேளைக்கூட பால் தங்காமல் முழுவதும் கறப்பது நன்று.
கால்நடைகளை குளிர்ந்த நீரில் தினசரி மூன்று அல்லது நான்கு முறை குளிப்பாட்ட வேண்டும். ஆதனால் வெப்பம் குறைந்து பால் உற்பத்தி, கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு அதிகரிக்கும், பெரிய பண்ணைகளில் இயந்திரங்கள் மூலம் கறவைமாடுகளின் மேல் நீரினை பனி போல தெளிக்க வைப்பதும் பயனளிக்கும்.
நன்றாக அடர் தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட சினைமாடுகள் மற்ற மாடுகளைவிட அதிக அளவு கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருள்கள் கொண்ட பால் கறப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிகிறது. எனவே கன்று ஈனும் முன்னரும், கன்று ஈன்ற பினனரும் கால்நடைகளுக்கு தேவையான அளவு அடர் தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.
மாடுகளை அதிகாலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். இதனால் வெயில் தாகத்திலிருந்து விடுபட்டு தீவனம் உண்ணும் அளவு குறையாமல் இருக்கும் தவிரவும் கால்நடைகளுக்கு தீவனம், வெயில் வருவதற்கு முன்போ, மாலை நேரத்திலோ அளிக்க வேண்டும்.
பசுந்தீவனத்தை கோடை காலங்களில் கால்நடைகளின் உடல் எடையில் 10 சதவீதம் வரை கொடுப்பது அவசியமானதாகும். இப்பசுந்தீவனத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொடுக்க பால் உற்பத்தி குறையாமல் இருக்கும், மேலும் அவற்றின் இனப்பொருக்க திறன் குறையாமல் இருக்கும்.
உலர்ந்த புல் தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் மேல் நீரை தெளித்து ஈரமாக பசுக்களுக்கு அளிக்கப்படவேண்டும்.
கால்நடைகளின் 6 மாத சினைக்காலம் முதல் 3 கிலோ அடர் தீவனம் கொடுத்து சினைமாட்டை நல்ல சதைப்பற்றுடன் வைத்திருந்தால், பால் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவம் அதிகமாக இருக்கும் கடைசி 2 மாத சினைக்காலத்தில் தினமும் 2 கிலோ அடர் தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.
வெயில் நேரங்களில் காற்றோட்டமாக கூரை கொட்டகையில் கட்டி வைக்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் மேயவிடவேண்டாம்.
சரிவிகித கலப்புத் தீவனம் அளிப்பதன் மூலமும், தேவையான அளவு தீவனம் உட்கொள்ள செய்வதன் மூலமும் பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவை அதிகரிக்கச்செய்யலாம்.
கறவை மாட்டுப் பண்ணையாளர்களும், விவசாய பெருமக்களும் மேற்கூறிய தரமான பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முறைகளை கருத்தில் கொண்டு கையாண்டால் தங்கள் வாழ்க்கையையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோகஷ்பிரியா, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார் மற்றும் மரு.ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.