முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் துணி்க்கடையில் கொள்ளை

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      சேலம்

 

சேலத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் பட்டபகலில் உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், கடையில் இருந்தவர்களை கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி, மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், 16 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துணிக்கடையில் கொள்ளை

 

சேலம் நாராயண நகர், சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் வசிப்பவர் பிரவீன் மௌரியா. மூன்றாவது மாடியில் வசிக்கும் இவருக்கு சொந்தமான துணிக்கடை மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி, இரண்டாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், கடைக்குள் முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி, அருவா உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி, கடையில் இருந்தவர்களை மிரட்டி உள்ளனர். தொடர்ந்து கடையில் இருந்து கண்காணிப்பு கேமிராக்களின் ஒயர்களை துண்டித்து, அதில் இருந்த டிஸ்க் ஐ எடுத்தனர். இதனையடுத்து கடையில் இருந்த நான்கு மடிக்கணினிகள், 8 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களையும், கடையில் இருந்த சுமார் 16 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து கொண்டு, கடையின் உரிமையாளர் பிரவின் உள்ளிட்டவர்களை மிரட்டி விட்டு, வெளியே சென்றவர்கள், தாங்கள் கொண்டு வந்த பூட்டை கொண்டு, கடையை வெளிப்புறமாக பூட்டி சென்றுள்ளனர்.

மூன்று முகமூடி கொள்ளையர்கள் சென்றவுடன், பணியாளர் வைத்திருந்த செல்போன் மூலமாக இது குறித்து தகவல் தெரிவிக்கவே, வந்து பூட்டை உடைத்து அனைவரையும் மீட்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், துணை ஆணையர் சுப்புலட்சுமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து