முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியில் 4 அமைச்சர்கள் நீக்கம்: மாயாவதி அதிரடி

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, டிச. 27 - உத்தர பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குமாறு கவர்னருக்கு முதல்வர் மாயாவதி பரிந்துரை செய்துள்ளார். இதை கவர்னர் ஜோஷியின் முதன்மை செயலாளர் பட்நாயக் உறுதி செய்துள்ளார். உயர் கல்வி துறை அமைச்சர் ராகேஸ்தர் திரிபாதி, விவசாயம், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் ராஜ்பால் தியாகி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அல்தேஷ் வர்மா, உள்துறை அமைச்சர் கார்டு ஹரிஓம் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான காரணத்தை முதல்வர் மாயாவதி தெரிவிக்கவில்லை. அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராகேஸ்தர் திரிபாதி, ஊழல் புகார் தொடர்பாக லோக் ஆயுக்தாவின் விசாரணைக்கு ஆளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago