முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

புதிய பஸ் ஸ்டாப்

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்தும், மூங்கில் கம்புகளை வைத்தும் அழகான பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. பேம்பூ ஹவுஸ் இந்தியா எனும் தனியார் நிறுவனத்தால் இந்த பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. 1000 பழைய பாட்டில்களை வைத்து 8 அடியில் இந்த பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று நாட்கள்

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

செல்ஃபி எடுக்க

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவுமாம்.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago