முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இயேசுவின் உருவம்

கிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள்  பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ரல்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படியும் ஒரு ஆய்வு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 5,208 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள் மற்றும் அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்களாம். இவர்கள் தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஐன்ஸ்டீன் தனது கையால் எழுதியசார்பியல் கோட்பாடு ரூ.9 கோடிக்கு ஏலம்

உலகின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், தனது சார்பியல் கோட்பாடுகள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரது சார்பியல் கோட்பாடு 1915 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள போஸ்டானில் இயங்கி வரும் ஏல நிறுவனம், ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பிரதியை கடந்த ஆண்டு நவம்பரில் ஏலத்திற்கு விட்டது. அதில், ஐன்ஸ்டீன் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் ஒரு பக்க கையெழுத்துப் பிரதி,  அன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.9 கோடிக்கு (1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு) ஏலம் போனது. அந்த கடிதம் போலந்து அமெரிக்கரான மற்றொரு இயற்பியலாளர் Bobby Livingston என்பவருக்கு ஜெர்மனியில் எழுதப்பட்டதாகும். இந்த பிரதி 40 மில்லியன் டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 1.3 மில்லியன் டாலருக்கே ஏலம் போனதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அவர் கையெழுத்தில் வெளியான கடிதம் (பிரபலமான E=mc² சமன்பாடு) அமெரிக்காவில் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதிலும் பாதுகாப்பு

பாஸ்வேர்டுடன் வரும் பென் டிரைவ் புதிதாக அறிமுகமாகியுள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம், டேட்டா டிராவிலர் 2000, யுஎஸ்பி 3.1 எனும் பென் டிரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த பென் டிரைவில் ஆல்பா நியூமரிக் கீபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பென் டிரைவில் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்ய முடியும். இதனால் அதில் உள்ள டேட்டாக்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, FIPS 197 சான்று பெற்ற என்க்ரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த பென் டிரைவ் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி போன்ற சேமிப்பு திறன் வசதியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,000, ரூ.14,000 மற்றும் ரூ.18,000 என கூறப்படுகிறது.

மாற்றி சேமிக்க....

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago