முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறு குச்சியே படகு...

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு  16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்களுக்கும் உண்டு

பெண்களுக்கு மட்டும் தான் மெனோபாஸ் என்னும் இறுதி மாதவிடாய் உள்ளது என்று நினைக்கிறார்கள். ஆண்களுக்கும் இம்மாதிரியான நிலை ஏற்படும். அதை ஆன்ட்ரோபாஸ் என்று சொல்வார்கள். இந்நிலையின் போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும்.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய பசுக்களுக்கு சிறப்பு விஆர் கண்ணாடிகள்

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய கால கட்டத்தில் கன்னாபின்னாவென தறிகெட்டு போய் கொண்டிருக்கிறது. எதெதற்கு கருவிகள் வரும் அது எப்படி வரும் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சகலும் சாதனம் மயம் என்றாகி விட்டது. அண்மையில் பசு மாடுகள் அதிக பாலை தர வேண்டும் என்பதற்காக வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த İzzet Koçak என்ற விவசாயிதான் இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். எங்களிடம் உள்ள பசுக்களில் 2 பசுக்களை தேர்வு செய்து அவற்றுக்கு விஆர் கண்ணாடிகளை அணிவித்தோம். அதில் பசுமையான சூழலை படம் பிடித்து காட்டினோம். தற்போது அவை கூடுதலாக 27 லிட்டர் பால் கறக்கின்றன என்கிறார். என்ன கொடும சார் இது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் கலி காலம் சாரி..டிஜிட்டல் காலம்.

உலகிலேயே அரிய வகையான இந்த குதிரையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

குதிரை என்றாலே அதன் உயரம், கம்பீரம், திமிர் ஆகியவைதான் நமக்கு தெரியும். ஆனால் உலகிலேயே அழிந்து வரும் இனமான, மிக சிறிய அரிய வகை குதிரை இனத்தை அர்ஜென்டினாவைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் 19 நூற்றாண்டின் மத்தியில் மீண்டும் உருவாக்கினர். அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில் அந்த குதிரை இனத்துக்கு Falabella என அந்த குடும்பத்தினரின் பெயரே சூட்டப்பட்டது. இந்த குதிரையின் மொத்த உயரம் எவ்வளவு தெரியுமா வெறும் 70 செமீ தான். அதாவது ஒரு ஆட்டின் உயரம் கூட இருக்காது. தற்போது இந்த குட்டை ரக குதிரை இனத்தை மேம்படுத்தி வளர்ப்பதையே அர்ஜென்டினாவில் பலர் செய்து வருகின்றனர். ஒரு பெரிய குதிரையின் சிறிய பொம்மை வடிவில் காட்சியளிக்கும் இந்த குதிரைகளை பார்க்க பார்வையாளர்கள் திரண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்