முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

கண்ணாடி பாதுகாப்பு

பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அது பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். 

பூமிக்கு அதிகமாக ஆக்சிஸனை தருவது எது தெரியுமா?

இப்படி சொன்னவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மழைக்காடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தாவரங்கள் என்பதுதான். ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே உண்மை. ஆனால் முழு உண்மை என்ன தெரியுமா... பூமிக்கு அதிகமான ஆக்சிஸனை தருவது கடல்தான். நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஸனை கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்று கூட கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. காடுகளை போன்று கடல்களில் இருந்தும் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

நடைப்பயிற்சி

எல்லோருக்கும் ஏற்ற, உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்கும் ஒரே பயிற்சி, அது நடைப்பயிற்சிதான். எனவே இதை‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்கிறோம். இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க, நடைபயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.

ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்தது எப்படி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

.-6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

புதுச்சேரியில் உள்ள வாதானூர் கிராமத்தில் பசு ஒன்று அதிசய கன்றை ஈன்றுள்ளது. இதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். வாதானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ். அவர் தனது வீட்டில் 5 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.   அதில் பசு மாடு ஒன்று அண்மையில் காளை கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கன்று வழக்கத்துக்கு மாறாக 6 கால்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய கன்றை வந்து பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.  -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்