சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள ஸ்டெனோகிராபி எனப்படும் புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற கிரேக்க தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான் வளர்ச்சியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் வாழும் தனிநபர் சுமார் 40 கிலோ எடையுள்ள டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் டன் அளவுக்கு டெக்ஸ்டைல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவை அனைத்தும் நிலத்தில் பரவி அதை விஷத்தன்மை உள்ளதாக ஆக்குகின்றன. காற்றில் பரவி காற்று மாசை ஏற்படுத்துகிறது. புவி வெப்பமயதாலுக்கு முதன்மை காரணி இது போன்று வெளியேற்றப்படும் கழிவுகள்தான் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64. இதில் நீலி எனும் பாஷாணம் மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடியதாம்.
பர்க்கின்சன் நோய் உண்டானவர்களுக்கு மற்றவர்களைப் போல் அவர்கள் செய்யும் காரியங்களை வேகமாகவும், இயல்பாகவும் செய்ய இயலாது. பிறரின் உதவியுடன்தான் செய்ய வேண்டியிருக்கும். நம்மூர் அப்பத்தாக்களையும், அம்மாச்சிக்களையும் நாம் அவ்வாறு கண்டிருக்கிறோம். அது போன்ற 84 வயது பர்க்கின்சன்னால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு விபரீத ஆசை வந்து விட்டது. அந்த வயதிலும் விமானம் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது. அமெரிக்காவைச் சேர்ந்த Myrta Gage என்ற 84 வயது மூதாட்டிதான் அவர். அவர் முன்னாள் விமான பைலட் என்பது கூடுதல் சுவாரசியம். எனவே அந்த வயதிலும் தன்னம்பிக்கை தளராமல் விமானத்தில் ஏறி விட்டார். நம்மூராக இருந்தால் விமான நிலைய வாசல் பக்கம் கூட அண்ட விட அனுமதித்திருக்க மாட்டோம். அவரது மகன் Earl தனது தாயார் விமானம் ஓட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.Cody Mattiello என்ற விமானியை தொடர்பு கொண்டு Earl தனது தாயாரின் ஆசையை தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் Lake Winnipesaukee மற்றும் Mount Kearsarge ஆகிய பகுதியில் Myrta Gage விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார். தள்ளாத வயதிலும் தளராம் விமானம் பெண் விமானம் ஓட்டும் அவருக்கு பாராட்டுகள் குவின்றன.
உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட். அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


