முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

'ட்விட்டர்' தெரியாதது

பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை

4 செமீ அகலமே கொண்ட உலகின் மிகவும் ஒல்லியான நதி

உலகின் மிகப் பெரிய நதி அமேசான். இது பல கண்டங்களை கடந்து செல்கிறது.  அதன் அகலம் மட்டும் சுமார் 6 மைல்கள். மழைக்காலங்களில் சில சமயம் 24 மைல்கள் வரை அகன்று பரந்து விரிந்திருக்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி எங்கே ஓடுகிறது தெரியுமா? சீனாவில். சீனாவின் வடக்கு பகுதியில் உள்புற மங்கோலியாவில் ஓடும் ஹூவாலாய் நதிதான் உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி. சுமார் 17 கிமீக்கும் அதிகமான தொலைவை கடந்து செல்லும் இந்த நதியின் அகலம் வெறும் 15 செமீ. ஒரு சில இடங்களில் இதன் அகலம் வெறும் 4 செமீ. ஒரே எட்டில் நாம் அதை தாண்டி விடலாம். ஒல்லியாக இருப்பதால் அது மற்ற நதிகளை காட்டிலும் ஓட்டத்திலும், பாய்ச்சலிலும் எந்த குறைவும் இல்லை என்பது ஆச்சரியம் தானே.

புதிய பாதுகாப்பு

இந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதான் காரணம்

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமான தொப்பை வரக் காரணம், அதிக பணிச்சுமையால், ஆண்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு தொப்பைக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிகமாக பீர் குடிப்பதாலும், அதிக நேரம், உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும் ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago