முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிக நீளமான நதிகள் எங்குள்ளன தெரியுமா?

உலகிலேயே மிகவும் நீளமான நதிகள் மூன்றுதான். அவை நைல், அமேசான் மற்றும் யாங்ட்ஸீ. நைல் நதியின் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 11 நாடுகள் பயன் பெறுகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதே போல தென் அமெரிக்காவில் பாயும் அமேசானும் மிகப் பெரிய நதியாகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் நீளமான நதியான யாங்ட்ஸீ சீனாவில் பாய்கிறது. ஆனால் இது மட்டும் தான் ஒரே நாட்டில் பாய்ந்து பலன் அளிக்கிறது.

கேள்விகுறியான மனிதர்களின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக  புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ஹேக்கிங்கைத் தவிர்க்க...

பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களை ஹேக் செய்யமால் தவிர்க்க பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இதை கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம்

முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா?

உலகின் முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா... அமெரிக்காவில் உள்ள மொன்டானா மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள பாலைவனப் பகுதியான இடாகோ என்ற இடத்தில் 1951 டிசம்பரில் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டமாக இதிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து வெறும் 200 வாட் பல்புகள் மட்டுமே எரிய பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் வெற்றிகரமாக 1954 இல் உலகின் முதன் அணு உலை ரஷ்யாவில் உள்ள Obninsk APS-1 என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் 5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் 1955 இல் அருகில் உள்ள ஆர்கோ என்ற சிற்றூருக்கு இதன் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

சிலருக்கு காபி இல்லை என்றால் அன்றைய தினம் அத்தனை சீக்கிரம் விடியாது. வேறு சிலருக்கோ வேலையும் ஓடாது, மூளையும் இயங்காது. ஆகவே காபி குடித்து நாளை உற்சாகமாக வைத்துக் கொள்பவர்கள் உலகம் முழுவதும் ஏராளமானோர் நிரம்பி வழிகின்றனர். அது, சரி, காபி குடித்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா, இதயத்தை பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா இப்படி ஆயிரம் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவது சகஜம். அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், உலகளவில் கோடிக்கணக்கானோர் தினமும் காபி அருந்தி வருகின்றனர்.  இந்நிலையில், 8,000 பேரை தேர்வு செய்து லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, தினசரி ஒரு கப், மூன்று கப், பல கப் என்று காபி அருந்துபவர்களை தரம் பிடித்து ஆய்வு மேற்கொண்டதில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உடலில் ஏற்படவில்லை.  இதனால், நாள் ஒன்றுக்கு 25 கப் வரை காபி அருந்தினால் கூட அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் காபி எனும் தேசிய பானம் காப்பாற்றப்பட்டுள்ளதாக குதூகலிக்கின்றனர் காபி பிரியர்கள்!

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!