சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி தனது மனைவியை பிரசவத்துக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னிடம் கைவசம் இருக்கும் குடிசை வீட்டையும் விற்றுத்தான் மருத்துவமனை கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும் என கவலையுடன் டாக்டரை அணுகியுள்ளார். ஆனால் டாக்டரோ எங்கள் மருத்துவமனையில் தேவதைகள் பிறந்தால் ஃபீஸ் வாங்குவதில்லை என கூறி அந்த தொழிலாளியிடம் அவரது பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் 1000க்கும் மேற்பட்ட பிரசவங்களை இலவசமாக செய்து கொடுத்துள்ளார். டாக்டர் கணேஷ் ராக் என்பவர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். மல்யுத்த வீரனாக மாற விரும்பிய அவரை அவரது அம்மா தான் மருத்துவராக ஆக்கி, பெண் குழந்தை பிறந்தால் ஃபீஸ் வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். அப்போது முதல் பெண் குழந்தை பிரசவத்துக்கு அவர் கட்டணம் வசூலிப்பதில்லை. அவரை உள்ளூர் மக்கள் நாயகனாக போற்றுகின்றனர். உண்மை தானே..
விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.
நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைக்கு பெரும்பாலான பொருள்கள் கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் முகம் பார்ப்பதற்கு கண்ணாடியாக விளங்கியது எது தெரியுமா.. ஒரு அடர் வண்ணம் கொண்ட பாத்திரத்தில் மிகவும் அசையாத வகையில் நிரப்பப்பட்ட நீரிலேயே அக்கால மக்கள் தங்கள் முகங்களை பார்க்க பயன்படுத்தி வந்தனர். இதுவே முதன் முதலில் கண்ணாடியாக பயன்பட்ட பொருளாகும். இன்றைக்கும் பழைய கோயில்களில் நாம் கண்ணா.டி கிணறு என்பதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.. அதேப் போலத்தான்.
அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ-வான ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


