முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இயந்திர மனித போலீஸ்

சீனாவில் ஹெனான் உள்ள லேங்க்லோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது அந்த இயந்திர மனிதன். 1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும். தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

வாசிப்பு அவசியம்

பாடப் புத்தகங்கள் மட்டுமே பயன்தராது, பரந்து விரிந்த உலகில், பல விதமான நூல்களையும் வாசிக்க, மாணவர்கள் பழக வேண்டும் என்பது ஆசிரியர்களின் அறிவுரை. வருங்காலச் சந்ததிக‌ள் பல சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகங்கள் நிலைத்திரு‌த்தல் அவசியம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் என்பதை விட, நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில், இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம். வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை . ஏப்ரல் முதல் வாரம் உலக நூலக வாரமாக கொண்டாப்படுகிறது.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பீர் பாட்டில்

செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.

ஆஸ்கர் விருது பின்னணி

உலக அளவில் சினிமாத் துறையில் சாதித்த கலைஞர்களுக்கு போர்வீரன் சிலை வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் 1929ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிலையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த சிற்பி ஜார்ஜ் ஸ்டேன்லி வடிமைத்துள்ளார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படும் இந்த விருதுகள் 13.5 இன்ச் உயரமும், 8.5 பவுண்ட் எடையும் கொண்டது. 2-ம் உலகப்போரின் போது வெண்கலத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 3 ஆண்டுகள் பிளாஸ்டரில் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டி விருதுகள் வழங்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் அந்த விருதுகளை தங்க முலாம் பூசப்பட்ட விருதுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு மாற்றிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago