எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சர்யங்களில் ஒன்று மயில். தோகை விரித்து ஆடும் மயிலின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை. மயில்கள் பற்றி நாம் பள்ளி பாடப் புத்தகத்திலேயே படித்திருப்போம். இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவையாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பறவை இனமான மயில்கள் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen. இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).ஆண் மயிலுக்கு தமிழ் மொழியில், சேவல் என்ற பெயர் உண்டு. 1963-ல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. மயிலினங்களைத் தேசியப் பறவையாகக் கொண்ட வேறு நாடுகள்: மியான்மர் மற்றும் காங்கோ.
மயில்கள் 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது. ஆனால், பூங்காக்கள் மற்றும் மனித தடைக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இந்தியாவில் பெரும்பாலான மயில்கள் மனிதர்கள் வேட்டையாடுவதால் உயிரிழக்கின்றன. 1972-ம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கால் விரல்களிடையே சவ்வுகள் இருந்தாலும் மயில்கள் நீச்சலடிப்பதில்லை. அந்த சவ்வுகள் தரைப்பகுதியை, மரக்கிளைகளை பற்றிக்கொள்ள மட்டுமே உதவுகின்றன. ஆண் மயில்கள் அழகான தோகையை கொண்டிருந்தாலும், அது நீச்சலடிக்க உதவுவதில்லை.
பொதுவாக மயில்களின் உடல் அழகான வடிவம் கொண்டிருப்பதால் கண்களை கொள்ளை கொள்கிறது. உலகில் பல வகை மயில்கள் இருந்தாலும், அவை இந்திய மயில்கள் போல் அழகாக இருப்பதில்லை. பார்ப்பதற்கு பெண் மயில்களை விட ஆண் மயில்கள் தான் மிகவும் அழகாக இருப்பவை. இருந்தாலும், கவிஞர்கள் ‘மயில் போல பொண்ணு ஒன்னு‘ என்று கற்பனை செய்வதெல்லாம் ஆண் மயிலை மனதில் நினைத்தே என்பது மட்டும் முரணாகவே இருக்கிறது.
மயில்களுக்கு புராணங்களிலும், கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க இடமுண்டு. மத வழிபாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சரஸ்வதிக்கு அடையாளமாகவும், கிரேக்கர்கள் வழிபாட்டிலும் இடம்பிடித்துள்ளது.
வண்ணமயமான மயில்களில் சில குறிப்பிட்டவை தெரிவு செய்து, கலப்பு முறையில் மனிதர்கள் இனப்பெருக்கம் செய்வதில் மயில்கள் வண்ணமற்று உருவாகின்றன. இதற்கு காரணம் உண்மையில் ஒரு மரபணு மாற்றமே ஆகும். இதுவே வெள்ளை மயில்கள் உருவாக காரணம்.
பிற வெள்ளை நிற விலங்குகள் உருவாக ‘அல்பினிசம்’ எனப்படும் மெலனின் நிறமி குறைபாடு தான் காரணம். ஆனால், வெள்ளை நிற மயில்கள் உருவாக அல்பினிசம் காரணமல்ல.
மயில் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது என்பது பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் உண்மை இதுதான். பெண் மயில்களை கவர ஆண் மயில் தன் தோகைகளை விரித்து ஆடுகின்றன. பிறகு கவரப்பட்ட பெண் மயிலுடன் இனச்சேர்க்கை முடிந்தபின் பெண் மயில்கள் 3 முதல் 6 முட்டைகள் இடும். அது அடைகாத்து குஞ்சு பொரித்ததும் வளரும் வரை கோழிகளை போன்று தாய் மயில் அவற்றை பாதுகாக்கும்.
மயில்கள் ஒற்றைத் துணையுடன் வாழ்வதில்லை. அவை இனச்சேர்க்கைக்கு வெவ்வேறு மயில்களையே நாடுகின்றன. அதேபோல் இனப்பெருக்கக் காலத்தில் பல துணையுடனும் இணைவதில்லை. பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.
மயில்களால் 11 வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும். அந்த ஒலிகள் மனிதர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கும். பொதுவாக மயில்கள் மழையை அறிவிக்க ஒலி எழுப்புகின்றன. நாய்கள் எழுப்பும் ஒலியை ‘குரைத்தல்‘ என்பது போல மயில்கள் எழுப்பும் ஒலியை ‘அகவுதல்‘ என்கிறோம். அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
மயில்கள் சாந்தமான பறவையாகவே பார்க்கப்படுகிறது. எளிதில் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டுள்ளது. அவை பழகும் மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கி பழகுவதை மயில்கள் விரும்புவதில்லை. வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972, மயில்களை வீட்டில் வளர்க்க தடைசெய்கிறது.
காடுகளிலும், வயல்களிலும் மயில்கள் சில நேரங்களில் பாம்புகளை காணநேர்கின்றது. விஷ பாம்புகளானாலும் மயில்கள் தான் நிச்சயம் வெல்லும். மயில்கள் பாம்புகளை பிடித்து உண்ணும். இந்தியாவில் வீட்டில் மயில்கள் வளர்க்க அனுமதியில்லை. கோவில்களில் வளர்க்கப்படும் மயில்கள் அந்த பகுதியில் உள்ள பாம்புகளை துரத்துகின்றன. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரணாக இருக்கின்றது.
மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருந்தாலும், நெடும் தூரம் பறக்க இயலாது. அவை குறிப்பிட்ட தூரம் மட்டுமே பறக்கின்றது. அதிலும் குறிப்பாக தன்னை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளவே பறக்கின்றன.
மயில்கள் தாவரங்கள், விதைகள், பூக்கள், எறும்புகள், தானியங்கள் மற்றும் சிறிய பாம்புகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள், எலிகள் உள்ளிட்டவற்றை உண்ணுகின்றன.
மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. அவை குறைந்த மரங்கள் கொண்ட நிலப்பரப்பிலேயே வாழுகின்றன. இயற்கையாகவே அவை இந்தியா, பர்மா மற்றும் இலங்கையில் பரவலாக காணப்படும்.
மயில் தமிழில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம் என்று பல்வேறு சொற்கள் மயிலைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. மயூரம் என்பது சமஸ்கிருத சொல்லாகும்.
வேட்டையாடுதல் மற்றும் மக்கள் தொகைப்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த அளவிலான மயில்களே உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில், வெள்ளை மற்றும் சாம்பல் நிற மயில்கள் காணப்படுகின்றன.
இத்தகைய கண்ணுக்கு அழகான மயில்களை ரசிக்கும் போது இவை அனைத்தையும் நினைவுப்படுத்தி பாருங்கள். அவை அற்புதமான படைப்பாகவும் உங்களுக்கு தோன்றும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
இந்தியா போர் தொடுத்தால்.... பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்களின் ரகசிய தகவல் வெளியானது
03 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என வெள்ளிக்கிழமை இரவில் நடந்த பாகிஸ்தான் ராணுவ சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தில் ராணுவ உயர் கமாண்டோக்கள் த
-
பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்த தகவல்: இலங்கை சென்ற சென்னை விமானத்தில் திடீர் சோதனை
03 May 2025கொழும்பு, சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2025
03 May 2025 -
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
03 May 2025சென்னை, சென்னையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறலை சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
03 May 2025சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க.
-
போப்பாகவே மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் : ஏ.ஐ. புகைப்படத்தால் சர்ச்சை
03 May 2025வாஷிங்டன் : போப்பாகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மாற்றிய டிரம்ப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்
03 May 2025சென்னை, தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேசுங்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 May 2025சென்னை, சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
03 May 2025புதுடில்லி, டில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார்.
-
சச்சின் சாதனை முறியடிப்பு: சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
-
2024 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து 26 பேர் சஸ்பெண்ட்
03 May 2025புதுடெல்லி, நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு 26 பேரை சஸ்பெண்ட் செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது
-
இந்தியா தாக்கும் அபாயம்: எல்லையோரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை காலி செய்தது பாகிஸ்தான்
03 May 2025புது டில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத முகாம்களை பாகிஸ்
-
கோடை விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
03 May 2025சென்னை : கோடை விடுமுறை எதிரொலியால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
-
காய்கறி கண்காட்சியுடன் நீலகிரியில் கோடை விழா தொடக்கம்
03 May 2025கோத்திகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
-
இங்கிலாந்து அரச குடும்பத்துடன் சமரசம் செய்ய இளவரசர் ஹாரி விருப்பம்
03 May 2025லண்டன், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
-
4.3 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம்
03 May 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இங்கிலாந்து மூதாட்டிக்கு உலகின் அதிக வயதுடைய மனிதர் பட்டம்
03 May 2025இங்கிலாந்து : உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது.
-
சொத்து வரி மீண்டும் உயர்வா? வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
03 May 2025சென்னை, உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது.;
-
அணை கட்டினால் அழித்து விடுவோம்: பாக். அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
03 May 2025டெல்லி : சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்
03 May 2025சென்னை, ‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
-
சிந்து நதியில் அணை காட்டினால் இடிப்போம்: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
03 May 2025இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத
-
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வு? தமிழக அரசு மறுப்பு
03 May 2025சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: 14 தமிழக மீனவர்கள் காயம்
03 May 2025வேதாரண்யம், : தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருப்பதி கோவிலில் 7 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
03 May 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
03 May 2025புதுச்சேரி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.