முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பொன்னாங்கன்னி கீரை சாம்பார் 

Cooking time in minutes: 
30
Ingredients: 

பொன்னாங்கன்னி கீரை சாம்பார்  செய்யத் தேவையான பொருள்கள்;

 1. பொன்னாங்கன்னி கீரை - 1 கட்டு.
 2. துவரம் பருப்பு - 350 கிராம்.
 3. மிளகாய் வத்தல் - 5.
 4. சீரகம், சோம்பு -1 ஸ்பூன்
 5. மல்லி - 2 ஸ்பூன்.
 6. பெருங்காயம் - சிறிதளவு.
 7. கடலை பருப்பு - 1 ஸ்பூன்.
 8. மஞ்சள் - 1 துண்டு.
 9. மிளகு,வெந்தையம் -1/2 ஸ்பூன்.
 10. நெய் - 3 ஸ்பூன்.
 11. கடுகு-உளுந்து -  1 ஸ்பூன்.
 12. பொடியா நறுக்கிய  வெங்காயம் -1.
 13. பொடியா நறுக்கிய தக்காளி -  2.
 14. கறிவேப்பிலை - 6  இழை.
 15. எலுமிச்சை - 1/2 மூடி. 
 16. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

 1. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
 2. நெய் சூடானவுடன் 5 குண்டுமிளகாய் வத்தல் போட்டு வதக்கவும்.(சம்பா வத்தல் போட்டால் 3 போதுமானது)
 3. இதனுடன் சீரகம், சோம்பு  ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. அடுப்பில் கடாய் வைத்து  2 ஸ்பூன் மல்லி,சிறிதளவு பெருங்காயம் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 5. அடுப்பில் கடாய்வைத்து  1 ஸ்பூன் கடலை பருப்பு, 1 துண்டு மஞ்சள் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 6. அடுப்பில் கடாய் வைத்து 1/2 ஸ்பூன் மிளகு, வெந்தையம் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 7. தனித்தனியாக வறுத்த அனைத்தையும் ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 8. அடுப்பில் குக்கரை வைத்து 350 கிராம் துவரம் பருப்பு யை  போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி  2 விசில்  வரும்வரை வேக விட்டு இறக்கவும்.
 9. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
 10. நெய் சூடானவுடன்  ஒரு ஸ்பூன் கடுகு,உளுந்து போட்டு வதக்கவும்,இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 11. நன்றாக வதங்கிய பின்னர் பொடியா நறுக்கிய 2 தக்காளி மற்றும் 6 கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
 12. இதனுடன் சுத்தம் செய்த ஒரு கட்டு பொன்னாங்கன்னி கீரையை போட்டு வதக்கவும்.
 13. தேவையான அளவு உப்பு போட்டு மிக்சியில அரைத்தவற்றை போட்டு வதக்கவும்.
 14. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு குக்கரை மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
 15. இதனுடன் குக்கரில் வேக வைத்த துவரம் பருப்புயை  போட்டு,தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைக்கவும்.
 16. 1/2 மூடி எலுமிச்சை பழ சாறு பிழிந்து விடவும்.
 17. இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
 18. சுவையான பொன்னாங்கன்னி கீரை சாம்பார் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony