முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை கறி.

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

முட்டை கறி செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. முட்டை – 5.
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2.
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1.
  4. பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
  5. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  6. ரிபைன்ட்  ஆயில் - 50 மில்லி.
  7. தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  8. சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  9. பூண்டு – 4 பல்.
  10. இஞ்சி - சிறிதளவு.
  11. மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  12. மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  13. மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  14. கடலை மாவு  - 1 டேபிள் ஸ்பூன்.
  15. உப்பு - தேவையான அளவு.
Method: 

முட்டை கறி செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பொடியாக நறுக்கிய தக்காளி 2,பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும். 
  2. ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 முட்டைகளை போட்டு வேக வைத்து முட்டைஓடுகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு   ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  நன்றாக  கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. மிக்சி ஜாரில் பூண்டு 4 பல் மற்றும் இஞ்சி சிறிதளவு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து வைத்து  50 மில்லி ரிபைன்ட் ஆயில் ற்றவும். 
  6. எண்ணெய் சூடானவுடன்  மஞ்சள் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  7. குக்கரில் வேக வைத்துள்ள 5 முட்டைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  8. இப்போது முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. கடாயில் மீதமுள்ள எண்ணெயில் மிக்சியில் அரைத்து  வைத்துள்ள வெங்காயம், மற்றும் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை,தனியா தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  11. இதனுடன் மிக்சியில் அரைத்து  வைத்துள்ள இஞ்சி பூண்டு  விழுது  ஒரு ஸ்பூன்  சேர்த்து வதக்கவும்.
  12. கரைத்து வைத்துள்ள கடலை மாவு   கலவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  13. ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் போட்டு கலந்து விடவும்.
  14. பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.
  15. சுவையான முட்டை கறி  ரெடி.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்