முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் வகுப்பு ரயில் பெட்டியில் எம்.பி.யை பயணிக்க வைத்த மக்கள்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மும்பை - முதல் வகுப்பு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த சிவசேனா எம்.பி.யை பொதுமக்கள் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வைத்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ஹேமந்த் கோட்சே. இவர் தேர்தலில் போட்டியிட்டபோது, நான் வெற்றி பெற்றால் நாசிக்கில் இருந்து மும்பைக்கு ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து அவர்களின் குறைகளைக் கேட்பேன் என்று உறுதி அளித்திருந்தார்.
ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் மட்டுமே பயணம் செய்து வந்தார். கடந்த 19-ம் தேதி அவர் நாசிக் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார். இதனை நாசிக் ரயில் பயணிகள் கவனித்தனர். அவர்களும் இதர பயணிகளும் சென்று எம்.பி.யை சந்தித்துப் பேசி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு வருமாறு அழைத்தனர். வேறு வழியின்றி ஹேமந்த் கோட்சே 2-ம் வகுப்பு பெட்டிக்கு மாறினார்.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ராஜேஷ் கூறியபோது, நாசிக்கில் இருந்து மும்பைக்கு நாள்தோறும் 8500-க்கும் மேற் பட்டோர் அலுவலகத்துக்கு செல்கின்றனர். எங் களின் கஷ்டங்களை எம்.பி.க்கு புரிய வைப்பதற் காகவே அவரை இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு அழைத்து வந்தோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து