முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் சூறாவளி புயல்: 17 ஆயிரம் மக்கள் தவிப்பு

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்தில் வானிலை மாற்றத்தினால் ஸ்காட்லாந்தின் மேற்கு பகுதியில் திடீரென சூறாவளி புயல் வீசியது. சுமார் 130 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதியில் நீண்ட நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டதால் 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சூறாவளி புயலை தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. வீடுகளுக்குள் வெள்ளம் புகு
ந்தது. இப்பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டது. சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மழை வெள்ளம் மற்றும் தொடர் மின்தடையினால் பரிதவித்தனர். கடற்கரையோர சாலைகளில் கடல்நீ ர் உள்ளே புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இப்பகுதியில் மின்சாரத்தை சரிப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று இங்கிலாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து