முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் அட்டை தொடர்பான மனு: விசாரணை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவதால் பெட்ரோலியத்துறை செயலர், ஓ.என்.ஜி.சி. தலைவர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியை சேர்ந்த ஆனந்தமுருகன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மானிய நிதி உதவியை பெறுவதற்கு ஆதார் எண்ணை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக் கூ டாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் திட்டத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் ஆதார் எண்ணை மத்திய அரசு கேட்க கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளதாக கூறி கேஸ் சிலிண்டர் முகவர்கள் ஆதார் எண்களை வரும் 31ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் இணைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி வருகின்றன. இதனால் கேஸ் இணைப்பு உள்ளவர்கள் ஆதார் புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆதார் எண் இல்லை என்பதால் எந்த ஒரு பயனாளிக்கும் மானிய உதவியை நிறுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளன. ஆனால் மத்திய பெட்ரோலிய துறையின் நடவடிக்கை இந்த உத்தரவுகளை மீறுவதாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை செயலர் சவுரப் சந்திரா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கழக தலைவர் தினேஷ் கே. ஷாப் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வி. தனபால், வி.எம். வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே ஆதார் எண் தொடர்பான மனு நிலுவையில் உள்ளதால் இரு மனுக்களையும் சேர்த்து விசாரிக்க உள்ளதாக குறிப்பிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து