முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியாளர் மேக்திக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள மேக்தியை மேலும் 15 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ட்விட்டர் சமூகவலைதளத்தில் 'ஷமிவிட்னஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட கணக்கின் பதிவு கள் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப் புக்கு ஆதரவாக செயல்பட்டதாக மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 5 நாட்கள் காவல் முடிவடைந்ததால் தனிப்படை போலீஸார் அவரை பெங்களூரு மாநகர குற்ற‌வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலீஸார் தரப்பில், மேக்தியை மேலும் 25 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சோமராஜூ 15 நாட்கள் போலீஸ்காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து, மேக்தி ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பெங்களூரு தனிப்படை போலீஸார் மட்டுமின்றி, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மேக்தியிடம் விசாரணை நடத்துவர் எனக் கூறப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து