முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் தீவிரவாத அமைப்பு அனைத்து அழிக்கப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளுல் அளிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்பியுள்ளது.

நவாஸ் ஷெரீப் மேலும் பேசியதாவது:

பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும் சரி, அவை எந்த மத உட்பிரிவைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, பாகுபாடின்றி தீவிரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும்" என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் கூறும்போது, "தீவிரவாதத்தை பாகிஸ்தான் மண்ணில் இருந்து வேரறுக்க பாதுகாப்புப் படை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டுபவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாட்டரசு உறுதி பூண்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து