முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த நெசவாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு - விருது

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி   நெசவாளர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான சிறந்த நெசவாளருக்கான  1 லட்சம் ரூபாய் விருது மற்றும் ஓய்வூதியம், பணி நியமன ஆணை, விருதுகளை அமைச்சர் வழங்கினார்.
நெசவாளர்களின் பாதுகாப்பு அரணாக அம்மா இருக்கிறார் என்றும் கோகுல இந்திரா கூறினார்.
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  செனாய் நகர் அம்மா அரங்கத்தில் நடந்தது.
இந்த விழாவில் 2014–15–ம் ஆண்டுக்கான  மாநில அளவிலான சிறந்த நெசவாளர் விருதின் வெகுமதியாக 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழை திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். வைரவேலுக்கு அமைச்சர் கோகுல இந்திரா வழங்கி வாழ்த்தினார்.
2009–10, 2010–11 மற்றும்  2011–12–ம் ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் சிறந்த வடிவமைப்பு  மற்றும் நெசவுத் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்தமைக்கான மொத்தம் 180 நெசவாளர்களுக்கு  ரூ. 6 லட்சம் அளவுக்கு  திறன்மிகு  நெசவாளர் விருது மற்றும் சான்றிதழ்களும், 2011–12, 2012–13 மற்றும் 2013–14 ஆகிய  மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் மாநிலத்தில் அதிக அளவுக்கு கைத்தறி துணி வகைகளை  ஏற்றுமதி செய்தமைக்காக  சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை  அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார்.
ஆதிதிராவிட வேலைவாய்ப்பு பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலூகா, அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுர மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ரூ.28.02 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தி மீண்டும் இயக்குவதற்கு  ஏதுவாக  ஆலைக்கு தேவையான  200 தொழிலாளர் மற்றம் 20 தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் புதியதாக சேர்க்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 4005 புதிய பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியமாக ரூ.10.30 கோடியும்,  324 புதிய பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.90 லட்சமும் சேர்த்து மொத்தம்  ரூ.11.20 கோடி அரசால் ஒப்பளிப்பு  செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஓய்வூதியத் தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் இன்று 20 பயனாளிகளுக்கு ரூ.6,08,640 அளவிற்கு  ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகைக்கான காசோலைகளை கோகுல இந்திரா வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து