முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு எதிராக கடல்வழி தாக்குதலுக்கும் தயாராகும் சீனா

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்த தயாராக இருந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்களது நீர்முழ்கிக் கப்பல்களிலிருந்து கடல் வழியாக தாக்கும் பேலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரிப்பதில் முன்னேறியிருப்பதாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவழித் தாக்குதல் தொடுக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா சுலபமாக அடையாளம் கண்டு முதல் ஏவுதலிலேயே முறியடிக்கும் திறன் கொண்டுள்ளதால் சீனா தற்போது எளிதில் அழிக்க முடியாத கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கான தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.
ஜே.எல்.2 ஏவுகணைகளை சீனா கடல் வழியாக தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஏவுகணைகள் சுமார் 7,350 கிமீ தூரம் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்டது ஏற்கெனவே அணுத்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை 2007ஆம் ஆண்டே சீனா அறிமுகம் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து