முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 23ல் திருச்செந்தூர் மாசி திருவிழா கொடியேற்றம்

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர் - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 
திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் மாசி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். வரும் 23ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கோயில் செப்புக்கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.

மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவார பணி செய்யும் நிகழ்ச்சியும் இரவில் ஸ்ரீபெலி நாயகர், அஸ்திரத்தேவருடன் தந்த பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. 5ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.

6ம் தேதி 12ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. மாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் 1ம் திருவிழா, 7ம் திருவிழா தினங்களில் அதிகாலை ஒரு மணிக்கும், 2ம் திருவிழா தினத்தில் அதிகாலை 4 மணிக்கும் மற்ற நாட்களில் வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கும் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து