முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் நாடு திரும்பினார்

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி - பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் 8 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பத்திரமாக நாடு திரும்பினார்.

இது குறித்து பிரதமர் மோடி கட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி செய்தி குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், பாதிரியார் பிரேம்குமாரை மீட்கும் விவகாரம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயரதிகாரிகள் குழுவால் கையாளப்பட்டு வந்தது. அவரை குடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய குடிமகனின் விடுதலைக்காக கடந்த 8 மாதங்களாக அயராது உதவி செய்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று சையது அக்பருதீன் கூறினார். இதனிடையே பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் பத்திரமாக நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் என்னை காப்பாற்றினார். அவருக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடியின் முயற்சியால் நான் விடுவிக்கப்பட்டேன். இதனால் அவருக்கும், வெளியுறவு துறை அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ், கொடைக்கானல் செண்பகனூர் திரு இருதய கல்லூரியில் உள்ள பீக் சமூகப்பணி மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். கடந்த 2011ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பழங்குடி மக்களின் மறுவாழ்வு பணியை மேற்கொள்ள சென்றார். அங்கு பணியில் இருந்த போது கடந்த 2014, ஜூன் மாதம் 2ம் தேதி ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் அவர் கடத்தப்பட்டார். பாதிரியாரை மீட்க கோரி கொடைக்கானல் பழங்குடியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாதிரியார் அலெக்ஸிஸ் பயங்கரவாதிகள் விடுவித்துள்ளனர். இதையடுத்து பழங்குடியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பாதிரியார் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, வாரியன்வயல் கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous February 24, 08:31

    அவரு மதத்தை பரப்ப எங்கயாவது போயிருப்பாரு அவரையாவது கடத்துறவதாவது.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து