முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகளில் 3 விதமான அம்மா உப்பு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்திய உப்பு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குனர் காமராஜ் பேசியதாவது:–

தமிழக மக்களின் நலன் கருதி ‘அம்மா உப்பு’ விற்பனை செய்யப்படுகின்றன. இதுவரை 3 விதமான அம்மா உப்பு விற்பனை செய்யப்படுகிறது.அயோடின் கலந்த உப்பு, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என்ற இந்த 3 வகையான ‘அம்மா’ உப்புகள் மொத்தம் 2,100 டன் விற்பனையாகி இருக்கிறது.
தமிழ்நாடு உப்பு நிறுவனம் ஏற்கனவே ரேஷன் கடைகளில் அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்துவருகிறது.

இது தவிர இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றையும் ரேஷன் கடைகள் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அம்மா உப்பு விற்பனை மாதந்தோறும் 3 ஆயிரம் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இது 5 ஆயிரம் டன்னாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அம்மா உப்பு விற்பனையை மேலும் பிரபலப்படுத்த விளம்பரப்படம் தயாராகிறது. ஒரு சில வாரங்களில் இது வெளியிடப்படும்.

வேதியல் பொருட்களின் விலை உயர்வு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளன என்றாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அம்மா உப்பு விலை உயர்த்தப்படமாட்டாது.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து