முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பி.தாயார் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தஞ்சாவூர் நாடாளுமன்றத்தொகுதி முன்னாள் உறுப்பினர் சிங்காரவடிவேலுவின் தாயார் மறைவுக்கு அதி்முக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிங்காரவடிவேலுவின் தாயார் தேவகி என்கிற கோவிந்தம்மாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தாயாரை இழந்து வாடும்  அன்பு சகோதரர் சிங்கார வடிவேலுவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன்,  அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திகிறேன். இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து