முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஜெயலலிதா வரவேற்பு

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு ஜெயலலிதா வரவேற்ப்பு தெரிவித்திருக்கிறார். 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:-.

2015-2016ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார உத்திகளை முற்றிலும்
வெளிப்படுத்துவதாக உள்ளது.

மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், நிதியமைச்சர் தனது இலக்கினை துல்லியமாக முடிவுசெய்து துணிச்சலான முயற்சியை எடுத்துள்ளார். பொருளாதாரத்தை மாற்றி அமைத்திருப்பதாகவும், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்திருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் பெருமைப்பட்டுக்கொள்கிறார். சில கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் சாதகமான நிலைமைகள்
ஏற்பட்டாலும், பெட்ரோலிய விலை வீழ்ச்சியால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் பயன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை என்பதை, மத்திய அரசின் பல்வேறு வரிவிதிப்புகள் காட்டுகின்றன.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றில்  மத்திய அரசு 4 சதவீதம் சேவை வரியாக வசூலிப்பது  மாநில வருவாயை பாதிக்கிறது. பெட்ரோலிய பொருட்களின்  விலை குறைந்துள்ள போதிலும் அதன் பயன் மக்களுக்கு சென்றடையவில்லை. முந்தைய பட்ஜெட்டில் திட்டச்செலவினத்திற்காக ரூ 5.லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யுப்பட்டது. 20014-15-ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 532 கோடியாக குறைக்கப்ப்ட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் இந்த தொகை 4லட்சத்து 65 ஆயிரம் கோடியாக  குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான இலக்கில், மாநிலங்களுக்கு பெரும் பங்கு வழங்கும் கூட்டாட்சியில் ஒத்துழைப்பு" குறித்து பெருமளவில் பேசப்பட்டு வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகள் இதனை பொய்யாக்கும் வகையில் அறிவிப்புகள் உள்ளது.,14-வது நிதிக்குழு கமிஷன் 32- லிருந்து 42 சதவீதமாக
பங்குகளை அதிகரித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு பல வகைகளில் பறித்துக்கொள்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது விதிக்கப்பட்ட லிட்டருக்கு 4 ரூபாய் என்ற வரியின் வருமானம் மாநிலங்களுக்கு கிடைக்கவில்லை. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய பட்ஜெட்டில் பொது செலவினங்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 லட்சத்து 75 ஆயிரத்து 532 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது - இதேபோல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிதியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது - இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க
வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று இதற்காக 3 இடங்களில் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம்  நான் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்ததேன்.அதே நேரத்தில் உலக பாரம்பரிய கலாச்சார சின்னத்திற்கான உதவியை பெறுவதற்கு தமிழ்நாட்டில் எந்த ஒரு பாரம்பரிய கலாச்சார சின்னமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு வழங்கும் மானியங்கள், தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காக, இத்திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை இந்த பட்ஜெட் முன்வைக்கும் அதேநேரத்தில், ஏழை-எளிய மக்கள் பெறக்கூடிய மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள், எந்தவகையிலும் குறைக்கப்பட்டுவிடக் கூடாது.மானிய உதவிகளை பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அதே நேரத்தில், இத்தகைய நடைமுறை உரம் மற்றும் உணவு பொருட்கள் மீது கண்மூடித்தனமாக செயல்படுத்தப்பட்டு விடக்கூடாது அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தாலும், அவை செயல்படுத்தப்படும் விவரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சுய உதவிக்குழுக்கள் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்புகளுக்கு மட்டுமின்றி, சிறு-குறு நிறுவனங்களுக்கு நிதி அளிக்க முத்ரா வங்கி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற
மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன - மதுரை-தூத்துக்குடி, சென்னை-பெங்களூரு போன்ற வணிக வழித்தட தொழில் முனையங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.

அனைத்துவகை கொள்முதலில், வெளிப்படையான நடவடிக்கையை உறுதிப்படுத்தி தமிழகம் முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தது தற்போது மத்திய அரசும் இதுபோன்ற சட்டம் தேவை என்பதை உணர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க, துரிதமாக அனுமதி அளிக்க வகை செய்யும் புதிய சட்டத்தைப் பொறுத்தவரை, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகளை மீறாத வகையில், மாநிலங்களிடமும் முழுமையாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில், படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்படும் திட்டங்களைச் சேர்ப்பதன் மூலமும், கச்சா பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமும், வரிவிதிப்பின் பாதிப்பைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத் தக்கது.

நீண்ட காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ச்சியாக
வலியுறுத்தி வந்துள்ளது .தமிழ்நாட்டில், மின்னணு வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த இந்த சீர்திருத்த நடவடிக்கையை தமிழக அரசு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.பசுமை மின்னாற்றல் நிதிக்காக, நிலக்கரி டன் ஒன்றுக்கு
விதிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் வரி, 200 ரூபாயாக உயர்த்துவது - ரயில்வே பட்ஜெட்டில் நிலக்கரி சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வரி உயர்வும் சேர்ந்திருப்பது மாநில மின்சார உற்பத்தி நிலையங்களைகடுமையாக பாதிக்கும் - அதன் தொடர்ச்சியாக, மின்சாரத்தின் விலையும் கடுமையாக உயர வழிவகுக்கும்.கறுப்புப் பணம் உருவாகும் வழிமுறைகளைக்கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டில் பணப் பரிவர்த்தனை மூலமான வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்ததுடன், தேசத்திற்குச் சொந்தமான பணம், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்படாமல் தடுக்க, மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள், வரவேற்கத்தக்கது.

அன்னிய நேரடி முதலீட்டிற்கு வழிவகை செய்வதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிதிச்சந்தையில் முதலீடு செய்வதை அதிகரித்து நேரடி முதலீட்டைக் குறைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் - இதனால், தொழில்துறையில் நேரடி அன்னிய முதலீட்டின் மூலம் கிடைக்கும் நீண்டகால பலன் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றமும் கடுமையாக பாதிக்கப்படும்.மொத்தத்தில் பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதை நடப்பாண்டிலேயே துவங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

உலக பாரம்பர்ய நகரங்கள் அறிவிப்பில் தமிழகம் இடம் பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து