முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"கான்" நடிகர்களின் படங்களை புறக்கணியுங்கள்: பாஜக தலைவர்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

டேராடூன் - பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான 3 கான்களின் படங்களை இந்து ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக பெண் தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்தது முதல் இந்து தலைவர்கள் கடுமையான வகுப்புவாத பிரச்சினைகளை செய்து வருகின்றனர். அவர்கள் மீது மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருந்த போதிலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்டும் காணாத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்து தலைவர்களின்  வகுப்பு துவேஷ பேச்சுகள் மக்கள் மனதில் நஞ்சை விதைப்பது போல இருப்பதாக  மதசார்பற்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் பாஜக பெண் தலைவர் சாத்வி பிராச்சி என்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான 3 கான்களின் படங்களை இந்து ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசியிருப்பது திரைப்பட துறையினரை கொதிப்படைய செய்துள்ளது. உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாத்வி பிராச்சி, இந்துக்கள் கட்டாயம் பாலிவுட் நடிகர்களான 3 கான்களின் படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பாலிவுட் படங்கள்தான் லவ் ஜிகாத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வருகின்றன. எனவே இந்து ரசிகர்கள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதே போல் ராகுல் காந்தி ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

முன்பு பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியதை போலவே தற்போது சாத்வவி பிராச்சியும் இந்து சமூக மக்களின் எண்ணிக்கை குறையாமல் தடுக்க இந்து பெண்கள் ஏராளமான குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் மீண்டும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து