முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம்

புதன்கிழமை, 11 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பள்ளியில் தேர்வுகள் நடப்பதால் திருப்பதி கோவிலில் கூட்டம் குறைந்துள்ளது. நேற்றுமுன் தினம் அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 43 ஆயிரத்து 446 பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் ஒன்னேஹால் மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். 300 ரூபாய் கட்டணத்தில் சென்ற பக்தர்கள் நேராக சென்று காத்திருக்காமல் தரிசனம் செய்தனர்.

வழக்கமாக திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மெகா லகுதரிசனம் என்ற தரிசன முறை கடைபிடிக்கப்படும். இதன்படி தூரத்தில் நின்றபடியே ஒரு வினாடி மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.  நேற்று முன் தினம் கூட்டம் குறைவாக இருந்ததால் லகுதரிசம் முரை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி பக்தர்கள் ஏழுமலையான் அருகில் உள்ள ராகுலமேடை வரை சென்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ஏழுமலையானின் மிக அருகில் சென்று தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து