முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீராம நவமி கொண்டாட்டம்: ஆந்திரா - தெலுங்கானாவில் கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - நாடு முழுவதும் நேற்று ஸ்ரீராம நவமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை தெலங்கானா மற்றும் ஆந்திர பக்தர்களும் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ராசலம் தேவஸ்தானத்தில் ஸ்ரீராம நவமி கொண் டாடப்பட்டது. இதனையொட்டி அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தம்பதியினர் பட்டு வஸ்திரங்களையும் முத்துக்களையும் காணிக்கையாக வழங்கினர். பின்னர் சீதாராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோன்று கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா பகுதியில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற கோதண்டராமர் கோயிலில் ஆந்திர அரசு சார்பில் ஸ்ரீராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதல்வர் கே.ஈ. கிருஷ்ணா ராவ் அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான சீதை, ராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்திகள், அனுமன் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து