முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதிக்கு எதிராக புதிய கட்சி: கன்சிராம் குடும்பத்தினர் திட்டம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

லக்னோ - மாயாவதிக்கு எதிராகப் புதிய கட்சி தொடங்க கன்சிராம் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே மாயாவதியை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். கன்சிராமின் இளைய சகோதரர் தல்பரா சிங், பகுஜன் சங்கர்ஷ் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

கன்சிராம் காட்டிய பாதையில் இருந்து மாயாவதி விலகி விட்டார். அவர் மீதான அதிருப்தி காரணமாக ஏராளமான தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். 2017ம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு புதிதாக கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளோம். கன்சிராம் பிறந்த இடம் பஞ்சாப் மாநிலம், அவர் வாழ்ந்த இடம் உத்தரப் பிரதேசம். இரு மாநிலங்களிலும் புதிய கட்சி போட்டியிடும். கன்சிராமின் கொள்கைகளை பரப்புவதே எங்களின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து