முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணாலும் கவர்ச்சி காட்ட முடியும் பிந்து மாதவி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

bindu mathavi

முந்தைய படங்களை வைத்தே நடிகைகளின் சென்டிமென்ட் கணிக்கப்படும். அந்த வரிசையில், பிந்து மாதவி அதிர்ஷ்டசாலி. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ போன்ற படங்கள், கவனிக்கத்தக்க வரவேற்பை பெற்றன.
கண்ணாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ள இவர், தன்னாலும் காமெடி பண்ண முடியும் என்பதை, ‘சவாலே சமாளி’ மூலம் பறைசாற்ற உள்ளாராம். ‘கழுகு’வில் சோகம் இழையோடும் கேரக்டரைக் கொடுத்த சத்யசிவா, இந்தப் படத்தில், அதற்கு நேரெதிரான கேரக்டரை பிந்துவுக்கு தந்துள்ளார்.


“முழு நீள காமெடி படத்தில் நடிக்கணும்கற ஆசை, இப்போது நிறைவேறிடுச்சு. ‘தெகிடி’ அசோக்செல்வன் தான் ஹீரோ. ஜெகன், நாஸர், ஊர்வசி, கருணாஸ், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரினு ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட் கூட நடிச்சதுல, காமெடி மீதான பயம் போயிடுச்சு.

பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட்னு நான் பார்ப்பதில்லை. நல்ல படத்தில் நான் இருக்கணும் என்பதுதான், என் குறிக்கோள்,” எனக் கண்ணை உருட்டி சிரிக்கிறார், பிந்து மாதவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து