முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் சட்டசபையில் அமளி: எதிர்க்கட்சியினர் வெளியேற்றம்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

நேற்று காலை சட்டப்பேரவை கூடியதும், காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட பல்வேறு விவகாரங்களை முன் வைத்து தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
 
தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதை தொடர்ந்து அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அவையில் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து