முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டம் வாபஸ்: கேரளாவுக்கு லாரிகள் ஓடத்தொடங்கின

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

கோவை - தமிழக கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியை சரக்கு வாகனங்கள் கடந்து செல்ல கால தாமதம் ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு தீர்வு காண கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராடட்த்தை தொடங்கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர லாரி உரிமையாளர் சங்கங்களுடன் கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, நிதி மந்திரி மாணி உள்ளிட்டோர் நேற்று முன் தினம் இரவு திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டக் குழு தலைவர் சண்முகப்பா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது லாரி உரிமையாளர்கள் வாளையாறு சோதனை சாவடியில் 10 கவுண்டர்கள் அமைக்க வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பிடம், தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு கேரள அரசு சார்பில் தற்போது உள்ள 3 கவுண்டர்களை 14 கவுண்டர்களாக அதிகப்படுத்தி தருவதாகவும், ரூ.12 லட்சம் மதிப்பில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது., கேரள அரசு சார்பில் நடத்தப்படும் எடைமேடையை லாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோதனைச் சாவடியில் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். ரூ.2 கோடியில் 300 லாரிகள் நிறுத்தம் அளவுக்கு நிலம் ஒதுக்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இவை அணைத்து 6 வாரத்திற்கு நிறைவேற்றப்படும் என்று கேரள அரசு உறுதியளித்தது. இதை நிறைவேற்ற அமைப்பதாகவும் அதில் கேரள அரசு சார்பில் 4 பிரதிநிதிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 4 பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள். 3 மாதத்துக்கு ஒரு முறை இந்த கமிட்டி கூடி கலந்து பேசிக்கொள்ளவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து 18 சோதனைச் சாவடிகள் வழியாகவும் லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்பட்டனர். விடுமுறையில் சென்றிருந்த லாரி ஓட்டுநர்கள் வேலைக்கு திரும்பினர். உக்கடம் லாரிப்பேட்டை, சூலூர் லாரிப்பேட்டை, வாளையாறு சோதனைச் சாவடி பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து