முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனதா பரிவார் குறித்து சிவசேனா கிண்டல்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஜனதா பரிவார் கட்சிகள் இணைக்கப்பட்டாலும், அவற்றின் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக எப்போது ஒருவரை ஒருவர் முதுகில் குத்திக் கொள்ள போகிறார்களோ தெரியாது என்று சிவசேனா கிண்டல் செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம், மதச்சார் பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உட்பட 6 ஜனதா பரிவார கட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதாக 2 நாட் களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டது.

புதிய கட்சிக்கான பெயர், சின்னம், கொடி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலையில், ஜனதா பரிவார் கட்சிகள் இணைப்பு குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகை சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜனதா பரிவார் கட்சிகள் புதிதாக இணைக்கப்பட்டாலும், அவற்றின் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் ஒருவரை ஒருவர் எப்போது முதுகில் குத்தப் போகிறார்கள் என்பதை சொல்ல முடியாது. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத்தும் ஜனதா பரிவார் கட்சிகள் இணைப்புக்கு முக்கிய பங்கு வகித்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், இருவருக்கும் இடையில் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இப்போது அவர்கள் இருவரும் உறவினர்களாகி விட்டனர். ஆனால், எத்தனை நாட்களுக்கு ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
பீகார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டால், லல்லு - நிதிஷ் - சரத்யாதவ் ஆகிய 3 பேருக்குள் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு தெரிந்துவிடும். ஆனால், இப்போதைக்கு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நட்பு பாராட்டிக் கொள்கின்றனர். எப்போது யார் முதுகில் யார் குத்தப் போகிறார்களோ? சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், கட்சிகள் இணைப்பு கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார். அதேபோல், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் பப்பு யாதவ், கட்சிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த எதிர்ப்புகள் எப்படி மாறும் என்பது தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் வரப்போகிற பீகார் தேர்தலில் முடிவு கிடைத்துவிடும். அப்போது நிதிஷ் குமார், சரத்யாதவ், முலாயம் சிங் யாதவின் அரசியல் விதியை பீகார் தேர்தல் முடிவு செய்யும். இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து