முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயி தற்கொலை செய்து கொண்டார் :பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் ராஜஸ்தானை சேர்ந்த சேர்ந்த கஜேந்திரசிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அந்த விவசாயி தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதியாகி உள்ளது. இதை டெல்லி போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,
பிரேத பரிசோதனை அறிக்கையில் சில பூர்வாங்க தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட விவசாயி தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அது என்று பாஸி குறிப்பிட்டார். டெல்லி போலீசும் அரசில் ஒரு அங்கம்தான் என்று கூறிய அவர், இதில் மோதல் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் சட்டப்படிதான் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் பாஸி. டெல்லியில் 2 தினங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பேரணி நடத்தியது. அப்போது கஜேந்திரசிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் பயிர்கள் நாசமாகி விட்டதாகவும், குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அந்த விவசாயி அதில் கூறியிருந்தார். இதனிடையே அவரது மறைவுக்கு டெல்லி போலீசார்  தான் பொறுப்பு என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறி வருகிறார்கள். போலீஸ் படையை மத்திய அரசு தனது பொம்மை போல் ஆட்டி வைப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் அது போதாது. விவசாயிகளை இனிமேலும் காட்சிப் பொருளாக்க வேண்டாம் என்று பாஜக அமைச்சர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனிடையே விவசாயி தற்கொலை பற்றி கருத்து தெரிவித்த கெஜ்ரிவால் அவர் தற்கொலை செய்து கொண்டதால் தன்னால் தூங்கவே முடியவில்லை என்று கூறியிருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து