முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்போர்ட்டில் எம்பிக்களுக்கு சிறப்பு சலுகை இல்லை வதேராவுக்கு அமைச்சர் கஜபதி ராஜூ பதிலடி

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏர்போர்ட்டில் எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் காட்டப்படவில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஏர்போர்ட்டில் அளிக்கப்பட்ட விஐபிக்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதற்கு வதேராவும் மிகவும் கிண்டலாக வரவேற்பு தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு தானக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அமைச்சர்  அசோக் கஜபதி ராஜூ ஏர்போர்ட்டில் மற்ற முக்கிய பிரமுகர்களுக்கு இலவசமாக டீ, காபி சப்ளை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறியதாவது:

ஏர்போர்ட்டில் விமான நிலையங்களில் எம்பிக்களுக்கு டீ, காபி இலவசமாக சப்ளை செய்யப்படுகிறது என்று குற்றமசாட்டை ஏற்க முடியாது. அது ஒரு மரியாதை நிமித்தமாக செய்யப்படும் நடவடிக்கை. ஏர்போர்ட்டில்  அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பதில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து தரப்பினரும் எளிதில் குற்றம் சாட்டும் துறையாக விமான போக்குவரத்து துறை மட்டுமே காணப்படுகிறது.
ஒரு கப் காபி அல்லது டீ கொடுப்பது என்பது எப்படி முன்னுரிமை விவகாரம் ஆகும். அது ஒரு மரியாதை அவ்வளவே, டீ கப்பில் எல்லாம் பிரச்னையை கிளப்ப பார்க்கிறார்கள். விமான போக்குவரத்துத் துறை தற்போது தவறான காரணங்களுக்காக அனைவரின் கவனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது என்றார்.

ஏர்போர்ட்டில் எம்பிக்கள் உள்ளிட்ட விஐபிக்களுக்கு டீ, கீபி, வாட்டர் பாட்டில் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும், எம்பி உதவியாளர்களுக்கு ஏர்போர்ட்டில் நுழைய பாஸ் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து