முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள நிலநடுக்கம்: 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதிநாதர் கோவிலுக்கு பாதிப்பு இல்லை

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

காட்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஏராளமான உலக பாரம்பரிய சின்னங்கல் அழிந்து விட்டன. குறிப்பாக தாராஹரா கோபுரம் மற்றும் தர்பார் சதுக்கம் உள்ளிட்ட இடங்கள் தரைமட்டமாகின.

பசுபதிநாதர் கோவில் நேபாளத்தில் மிகவும் புகழ்பெற்றது. சிவன் கோவிலான இங்கு சுற்றுலா பயணிகளும், இந்துக்கள் சென்று வழிபட்டு வந்தனர். இக்கோவில் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதுவும் நேபாளத்தின் காட்மாண்டு பள்ளத்தாக்கின் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த கோவிலுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. 7.9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்ட போதிலும் கோவிலுக்குள் உள்ள சுவர்களில் சிறு கீறல் கூட இல்லை என பக்தர் ஒருவர் பக்தி பரவசத்துடன் கூறினார்.

பூகம்பம் ஏற்பட்டு பூமி குலுங்கியபோது வீட்டுக்குள் இருந்த மக்கள் உறவினர்கள் வீடுகளை தேடி ஓடவில்லை. மாறாக பசுபதிநாதர் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனர். பசுபதிநாதர் தங்களை காப்பாற்றி விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். ஆனால் கோவிலின் சுற்று சுவரில் மட்டும் மிகச் சிறிய அளவில் கீறல் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்தில் பலியான வர்களின் உடல்கள் ஒரே இடத்தில் மொத்தமாக வைத்து தகனம் செய்யப்பட்டு வருகின்றன. பசுபதி நாதர் கோவிலுக்கு அருகே 100 உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து