முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி 26ம் தேதி கேரளா வருகை

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் டெல்லியில ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதன் பிறகு சுதீரன் கூறியதாவது:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 26ம் தேதி கேரளா வருகிறார். கோழிக்கோட்டில் நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொள்கிறார். 27ம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சூர் சாவக்காடு கடற்கரையில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதன்பிறகு ஆலுவாவிருந்தினர் மாளிகையில் ரப்பர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ரப்பர் விலை வீழ்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதன் பிறகு அன்று மாலை ராகுல் காந்தி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து