முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்கூட்டணி அமைக்க லாலு பிரசாத் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 22 மே 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதற்காக அவர் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் உள்பட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்  முனைந்துள்ளார்.லாலு பிரசாத்தின் இந்த முடிவால் ஜனதா பரிவார் கட்சிகள் அமைப்பு உருவாக்குவதில் பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது..

பெரும் கூட்டணி அமைப்பது தொடர்பாக லாலுபிரசாத் நேற்று முக்கிய தலைவர்களை சந்தித்தார்அவர்  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரைசந்தித்து தனது கருத்துரு குறித்து பேசினார். இந்த சந்திப்பு கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ள வில்லை.அவருக்கு கண்ணில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் அவர் லாலு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

பீகார் மாநில தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதற்காக இடது சாரிகள் உள்பட பல கட்சிகளையும் ஒரே கூட்டணியாக போட்டியிட லாலு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.பீகாரில் நிதிஷ் குமாருக்கு முன்னதாக ஜிதன் ராம் மன்ஜி முதல்வராக இருந்தார் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியது,அவர் பதவியில் இருந்து விலக மறுத்ததால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.இதனால் ஜிதன் ராம் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற கட்சியை துவக்கினார்.லாலு மேற்கொள்ளும் கூட்டணியில் ஜிதன் ராமும் இடம் பெறுவார்  என்பதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின. இது குறித்து நிதிஷ் குமாரிடம் கேட்ட போது எனக்கு யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை என்று தெவித்தார்.

நிதிஷ் குமார் இடம் பெறும் கூட்டணியில் எனது கட்சி இடம் பெறாது என ஜிதன் ராம் மன்ஜி ஏற்கனவே கூறியிருந்தார். வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சியும் பெரும் வெற்றி பெற வேண்டும் என முனைந்துள்ளது.பாரதிய ஜனதா கூட்டணியில் ஜிதன் ராம் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து