முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள், முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான் பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவபுரம் நகராட்சி, ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள """"அம்மா உணவகத்தை"" காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200 அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்  சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் """"அம்மா உணவகங்கள்"" முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 19.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன. தற்போது சென்னை மாநகராட்சியின் சார்பில் 207 அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி இதர மாநகராட்சிகளில் 90 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், 12.2.2014 அன்று மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும், 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும், 22.9.2014 அன்று சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.  அம்மா உணவகங்களில் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை இட்லி சாம்பாரும், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இட்லி ஒன்று 1 ரூபாய் வீதமும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர்சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி, சாம்பார் தவிர, பொங்கல் மற்றும் சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது சாம்பார் சாதம் மற்றும் தயிர்சாதம் தவிர எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.  முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தனை திறனால் உருவாக்கப்பட்டு, பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் குறித்த செய்தி அறிந்து, இந்தத் திட்டத்தினை தாங்களும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளும், நம் நாட்டில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, சிறப்பாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினைப் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவை மேலும் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.  அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவபுரம் நகராட்சி, ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள """"அம்மா உணவகத்தை"" காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். மேலும், சென்னை மாநகராட்சியில் 45 அம்மா உணவகங்கள், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள், என மொத்தம் 201 அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன்,தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, . சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் / ஆணையர் விக்ரம் கபூர், ., நகராட்சி நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து