முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திற்கு மேகி பொருளை எரிப்பதற்கு நெஸ்லே நிறுவனம்ரூ20 கோடி அளிக்கிறது

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: நெஸ்லே நிறுவனத்தின் மேகி நுாடுல்சில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்ரசாயனங்கள் இருந்ததால் அந்த உணவுகப்பொருளை விற்பனை செய்வதற்கு பல மாநிலங்கள் தடை விதித்தன. இந்த நிலையில் நெஸ்லே நிறுவனம் மேகி நுாடுல்சை கடைகளில் இருந்து திரும்ப பெற்று அழித்து வருகிறது. இந்த மேகி உணவுப்பொருள் மகாராஷ்டிரா மாநில த்தில் உள்ள சந்த்ரப்பூரில் உள்ள அம்புஜ◌ா சிமெண்ட் ஆலையில் எரிக்கப்படுகின்றன.

இந்த உணவுப்பொருளை அழிப்பதற்கு ரூ20கோடியை நெஸ்லே நிறுவனம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திற்கு அளிக்கிறது. இது குறித்து நெஸ்லே நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரை தொடர்பு கொண்ட போது மேகியை எரிப்பதற்கு எவ்வளவு தொகை தரப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்தார். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மேகியில் இருந்ததால் ரூ320கோடி மதிப்பிலான மேகி பொருட்களை நெஸ்லே நிறுவனம் திரும்பப்பெற்று அழித்து வருகிறது.

தங்கள் உணவுப்பொருளுக்கு தடைவிதிப்பதை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.கடந்த ஜூன் 5ம்தேதியன்று மேகி உணவுப்பொருளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை அமைப்பு தடை விதித்தது.இதனைத்தொடர்ந்து நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து மேகி உணவுப்பொருட்களை திரும்ப பெற்று அழித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து