ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: சோம்தேவ் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

வின்னெட்கா: அமெரிக்காவின் வின்னெட்கா நகரில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது சோம்தேவ் வென்ற 5-வது ஏடிபி சேலஞ்சர் பட்டமாகும்.  சோம்தேவ் தனது இறுதிப் போட்டியில் 7-5, 4-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனியல் நுயனை தோற்கடித்தார். மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 3 மணி நேரம், 31 நிமிடங்கள் நடைபெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் அதிகநேரம் விளையாடிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து