முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

செயின்ட் லூயிஸ்(அமெரிக்கா): அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்கு பீல்ட் செஸ்போட்டியில் முதல் சுற்றிலேயே இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியைத்தழுவினார்.அவரை அமெரிக்காவினைச்சேர்ந்த ஹிகாரு நகமுரா வீழ்த்தினார். தோல்வியைத்தழுவிய ஆனந்த் 5முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.இந்த  போட்டியில் ஆனந்திற்கு சிறிதளவே அதிர்ஷ்டம் இருந்தது.

நகமுராவின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஆனந்த் துவக்கத்தில் ஈடுகொடுத்து ஆடியபோதும் எதிராளியின் கடும் நிர்ப்பந்தத்தில் தோல்வியை தழுவினார். ஆட்டத்தின் 40வது நகர்த்தலில் நகமுரா முன்னிலை பெற்றார். அதன் பின்னர் மேலும் 3காய்கள் நகர்த்தப்பட்ட நிலையில் ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்