முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய மாணவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      உலகம்
Image Unavailable

வெர்ஜினியா - அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றத்துக்காக 11ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த அலி ஷூக்ரி அமின் என்ற கல்லூரி மாணவர், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதன் மூலம் கல்லூரி மாணவர்களை ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க அவர் தீவிர முயற்சி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து அமெரிக்க ரகசிய புலனாய்வு குழுவினர் அலி ஷூக்ரி அமினை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 7000 ட்வீட்டுகள் ஐ.எஸ். ஆதரவாக அவரது ட்விட்டர் இடம்பெற்றிருந்தது. விசாரணையின் முடிவில் மாணவருக்கு 11 மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க உத்தரவிட்டது.

ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக அமெரிக்ககா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அங்கு, சிறார் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்துக்காக தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்