முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி தயானந்த சரஸ்வதி காலமானார்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2015      ஆன்மிகம்

கோவை: சுவாமி தயானந்த சரஸ்வதி ரிஷிகேஷில் உள்ள தனது ஆசிரமத்தில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 85.அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதி கடந்த 1930ம்ஆண்டு திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தார். அவரது ஆரம்ப கால பெயர் நடராஜன் என்பதாகும், அவர் இந்திய தத்துவத்தின் மீது குறிப்பாக அத்வைதா பள்ளிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவாமி சின்மயானந்தாவுடன் 1950மற்றும் 1960ம் ஆண்டுகளின் துவக்கத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். சுவாமி சின்மயா நந்தாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் வேதாந்த பாடங்களை எடுத்து வந்தார். 1962ம்ஆண்டு அவர் சன்னியாசத்தை மேற்கொண்டார். அப்போது அவரது பெயர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பெயர் மாற்றப்பட்டது.அவர் சுவாமி சின்மயானந்தாவுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

அவர் வேத பாடசாலைகளையும் நடத்தினார். அதில் பல நூறு மாணவர்கள் வேதபாடங்களை கற்று தேர்ந்தனர். வேத பாடங்களை போதிக்கும் ஆசிரியர்களை உருவாக்கியதுடன் வாய்ப்பு வசதிகள் அற்ற இடத்தில் பள்ளிகளை நிர்மாணிப்பதும் சுவாமி தயானந்த சரஸ்வதி யின் முக்கிய நோக்கமாக இருந்தது.இந்த மாதம் 11ம் தேதியன்று பிரதமர் மோடி சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்