முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - பிராமணர் அல்லாதோருக்கும் அர்சக்கர் பயிற்சி அளிக்க திருப்ப்தி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி வேத பாடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழங்குடியினத்தவர்களுக்கு குறுகிய காலமாக 3 மாதத்தில் வேத பாடங்கள் கற்று தரும் திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனை தற்போது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என விரிவாக்கம் செய்து, முழு நேர பாடத்திட்டத்தில் கற்றுத் தர உள்ளனர்.

இது குறித்து ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் கூறுகையில்,
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அறநிலையத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து அர்ச்சகர் பணிக்காக வேத பாடசாலையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டி, பயிற்சி முடித்த இளைஞர்களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார். இதேபோல் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் வேத ஆகம பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்