முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கு நெசவுப்பயிற்சி அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கிவைத்தார்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதலமைச்சர் -ஜெயலலிதா ஆணைப்படி, காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநுhல் துறை சார்பாக நெசவுப்பயிற்சி வகுப்பினை கைத்தறி துறை அமைச்சர் .எஸ்.கோகுலஇந்திரா, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள நெசவாளர் பயிற்சி மையத்தில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.. காஞ்சி காட்டன் சேலைகளுக்கு புத்துயிரூட்டும் விதமாக பிரத்யேகமாக ஒரு தறி மட்டும் காஞ்சி காட்டன் சேலை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இயற்கை சாயங்களை பயன்படுத்தி பட்டு சேலை நெசவு பயிற்சியும், ஒரு பக்க கோர்வை பட்டு உற்பத்திக்கு நெசவுப் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

இந்த விழாவின் தொடர்ச்சியாக, அருகிலுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளுவர், முருகன், அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர்கள் 52 நபர்களுக்கு நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. மேலும், நெசவாளர் பயிற்சி திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.20,000/-மும், முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.30,000/-மும், நெசவாளர் கடன்அட்டை திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு கடனுதவியாக ரூ.12.50 இலட்சமும் மேலும், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காலமான உறுப்பினர்களின் வாரிசுதாரர்கள் 5 நபர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.3.00 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.16.00 இலட்சம் நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கைத்தறி துணிநூல்துறை கூடுதல் இயக்குநர் க.கர்ணன் வரவேற்றார். காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் . மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் .சோமசுந்தரம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்

இந்த விழாவில், காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தும்பவனம் டி.ஜீவானந்தம், மேலும்  நெசவாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் வீ.வள்ளிநாயகம், ., .ஜெயந்தி சோமசுந்தரம்,ஏ.செல்வராஜ், .கே.வாசு,பா.ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் நெசவாளர் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். விழா நிறைவில் சரக இணை இயக்குநர் .இரா.மோகன்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்